கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மூலக்கொத்தளத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். மூலக்கொத்தளம் மண்டல அலுவலகத்தில் இருந்து வியாசர்பாடி முல்லை நகர் வரை பேரணி நடைபெற்றது.