சென்னை அடுத்த பனையூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நீச்சல் குளத்துடன் கூடிய கட்சி அலுவலகத்தை திறந்துள்ளார். புதுச்சேரியில் பாமக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதையடுத்து, புதியதாக கட்சி அலுவலகம் திறந்துள்ளதாக அன்புமணி அறிவித்தார்.