கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் இரண்டு மணி நேரமாக வரிசையில் காத்திருந்த நோயாளிகள், மிகுந்த சிரமம் அடைவதாக கவலை தெரிவித்தனர். நாள்தோறும் விருதாச்சலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் காலை 9 மணிக்கு வரவேண்டிய மருத்துவர் 11மணி ஆகியும் வரவில்லை எனவும், உடல்நிலை சரியில்லாமல் தரையில் அமர்ந்து நீண்ட நேரம் காத்திருப்பதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டினர்.