நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பள்ளத்து கருப்பணார் கோவில் திருவிழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திறந்த வெளியில் காட்சி தரும் பள்ளத்து கருப்பணார் சுவாமிக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சித்திரை இரண்டாவது புதன்கிழமையில் நடைபெறும் திருவிழா, நடப்பாண்டு சிறப்பாக நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த சுவாமிக்கு பல தானிய பூஜை, பொங்கல் பூஜை மற்றும் பலா பூஜை நடத்தப்பட்டது.