நீலகிரி மாவட்டத்தில் உள்ள பட்டியல் இனத்தவருக்கு நிலம் மற்றும் வீட்டு மனை வேண்டி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 40 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த வீடு இன்றி வாழ்ந்து வரும் பட்டியல் இனத்தவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளதாவும், இந்த நிலங்களை கண்டறிந்து தங்களுக்கு வீடு கட்டி கொடுக்க, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.