தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீராணத்தில் வேறு ஒருவரின் வீட்டிற்குள் பதுங்கியிருந்த மப்டி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீ.கே.புதூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சதீஷ்குமார் , வீராணம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்திருந்தை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர்.