உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் நமது கடமை என்ன என்பது கூடத் தெரியாமல் சட்டமன்றத்துக்கு வந்து செல்வதாக ஆளுநரை சபாநாயகர் அப்பாவு மறைமுகமாக விமர்சனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஆனக்குழி பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்த அவர், அரசியலமைப்புச் சட்டம் சொல்லி இருப்பதை தாண்டி எதுவும் செய்யக் கூடாது என்பதுகூடத் தெரியாத பித்தம் பிடித்தவர்களாக இருப்பதாக விமர்சித்தார்.