திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வில்பட்டி அருகே தரிசு நிலத்தில் தார்ப்பாய் டெண்ட் அமைத்து வாழ்ந்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சொந்த வீடு இல்லாமல், வாடகை கொடுக்கவும் பொருளாதார வசதியில்லாமல் குருசாமிபள்ளம் பகுதியில் ஒன்றேமுக்கால் ஏக்கர் பரப்பளவுள்ள தரிசு நிலத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். நிரந்தர முகவரி இல்லாததால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை பெறுவதிலும், குழந்தைகளின் கல்வி பாதிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.