பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.