குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த நகர பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். கொல்லங்கோடு தேனாந்தோட்டம் பகுதியில் தேங்கும் தண்ணீர் சவரிக்குளத்தில் உள்ள வடிகால் வழியாக வெளியேறி வந்த நிலையில், தற்போது வடிகால் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டு குளம் நிரம்பி அப்பகுதியிலுள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததாக கூறப்படுகிறது.