பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மக்கள் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்த பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்த நிலையில், முன்பதிவு செய்யாதவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.