பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசுங்கள், பிரபாகரனின் வெடிகுண்டை உங்கள் மீது வீசுகிறேன் என சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தன்னிடம் உள்ள வெடிகுண்டை வீசினால் உங்களை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.