திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வளர்ப்பு நாய், வட மாநில தொழிலாளியின் பிறப்புறுப்பைக் கடித்துக் குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கிலிகுப்பத்தில் உள்ள உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணிபுரியும் மேற்குவங்கத்தை சேர்ந்த ஷெரீப், உணவகத்தின் வெளியே உள்ள கழிப்பறைக்கு சென்றார். அப்போது, மின்சார சார்ஜிங் மெஷினில் காருக்கு சார்ஜ் போடுவதற்காக தங்களது வளர்ப்பு நாய்களுடன் தம்பதி வந்தனர். இந்த நாய்கள் ஷெரீப்பை பார்த்து பயங்கரமாக குரைத்த நிலையில், திடீரென ஒரு நாய் ஓடி வந்து அவரது பிறப்புறுப்பைக் கடித்துக் குதறியது.