மாத சம்பளம் வழங்க வலியுறுத்தி, வேலூர் தொரப்பாடி சிவில் சப்ளை குடோனில் பணியாற்றி வரும் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மாவட்டத்தில் தாலுகா வாரியாக பிரிக்கப்பட்ட குடோன்களில் ஒப்பந்த அடிப்படையில் சுமை தூக்கும் பணிக்கு ஆட்கள் நியமிக்கப்படுவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.