ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில்மாவட்ட எஸ்.பி விவேகானந்தா சுக்லா பார்வையிட்டார். ஹரிஷ் என்பவரை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்ற நிலையில், சிறுநீர் கழிக்க கீழே இறங்கியபோது உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது