கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க்-ஐ அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் செந்தில்பாலாஜியும் சேர்ந்து திறந்து வைத்தனர். ஒரு கோடியே 14 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் அமைச்சர்கள் திறந்து வைத்ததையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.