முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திருத்தணி முருகனை தரிசிக்க வருகை தந்தனர். கூட்டம் நிரம்பி வழிந்ததால், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாடவீதியை சுற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.