திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மாந்திரீகம் மூலம் பணக்காரர் ஆக்குவதாக கூறி முன் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்று வேலையில் ஈடுபட்டவனை போலீசார் கைது செய்தனர். ரகு என்பவன் சதீஷ் என்பவரிடம் மாந்திரீகம் மூலம் பணக்காரர் ஆக்குவதாகவும் தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற செய்ய முடியும் என ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றியுள்ளார்.