விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் பாமக கவுன்சிலரை உருட்டுக் கட்டையால் தாக்கிய திமுக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திமுக நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, அவரது சகோதரர் மதியழகன் ஆகியோருக்கும் நகராட்சி 8-வது வார்டு பாமக கவுன்சிலர் சிவராமனுக்கும் இடையே தென்னை மரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது