இளைஞர்கள் கஞ்சாவிற்க்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்துவருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோவை மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். மேலும் காவல்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.