திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தடையை மீறி கடலில் குளித்த காவலர் மகன் அலையில் சிக்கி உயிரிழந்தார். சென்னை புழல் சிறையில் காவலராக பணிபுரியும் டேனியல் மகன் மோசஸ் என்பவர் நண்பர்களுடன் கோரைக்குப்பம் பகுதியில் கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட நண்பர்கள் கூச்சலிடவே, அப்பகுதியினர் கடலில் குதித்து மோசஸை மீட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.