நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு வெண் பொங்கல் உட்பட சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்ப வனத்துறையினர் நடனமாடினர்.