திருப்போரூர் அடுத்த பையனூரில், தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பங்கேற்று ஆடிப் பாடி, பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பொங்கல் வாழ்த்து பரிமாற்றம்செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பையனூரில் இயங்கி வரும் அறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும் வேட்டி சேலை அணிந்து வந்து செங்கரும்பு வைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ந்து ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.ஆடிப்பாடி மகிழ்ந்த மாணவர்கள்இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்தல், கோலம் போடுதல், கயிறு இழுத்தல், பூக்கட்டுதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றது. அப்போது தப்பாட்டத்திற்கு மாணவ மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். கல்லூரி விழாவில் பறந்த தவெக கொடிமேலும், அங்கு நடனமாடிய மாணவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடியினை கையில் ஏந்தியவாறு நடனமாடி தங்கள் உற்சாகத்தை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையும் பாருங்கள் - கல்லூரியில் களை கட்டிய கொண்டாட்டம்