சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பழமை வாய்ந்த புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், 5 கரும்புகள் கொண்ட கட்டு 50 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியது. புனித அந்தோணியார், பாத்திமா மாதா ஆகியோரின் சொரூபங்கள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து பவனி நடைபெற்றது.