நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் தவெக நிர்வாகிகள் விஜய் நடித்துள்ள 69 திரைப்படங்களில் போஸ்டர்களை கைகளில் ஏந்தி 69 பொங்கல் வைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர். தவெக சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஒரே மாதிரியான புடைவை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.இதையும் படியுங்கள் : மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர்