கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி தற்போது நல்ல விளைச்சலை கண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ தக்காளி 15 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 முதல் 5 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.