தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, மீண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு மாவட்ட நிர்வாகிகள் முள்வேலி அமைத்தனர். பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.