மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பரளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுவதுமாக கைவிட வலியுறுத்தி கேசம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.