கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கிராம உதவியாளர் ஜாகிதா பேகத்தின் மரணத்திற்கு நீதி கேட்டு, சக கிராம உதவியாளர்கள் மற்றும் வருவாய் நிர்வாக அலுவலர்கள் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவனார்த்தங்கல் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த ஜாகிதா பேகம், BLO ஆக வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டு வந்தார். அவரது கிராமத்தில் 800 படிவங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய இடத்தில், இதுவரை 80 படிவங்கள் மட்டுமே பூர்த்தி செய்து முடித்ததால் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜாகிதா பேகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.