புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் அதிமுக ஈடுபடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்தார்.மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அண்ணா சிலை முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இந்தியா கூட்டணியினர் பந்த் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய நாடகம் என்றார்.