செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் முடிய 2 நாட்களே இருப்பதால் கூட்டம்.5,000 ரூபாய் அபராதம் என்ற சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கையை அடுத்து செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த மக்கள் காத்திருப்பு.செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, சிப் பொறுத்தப்பட்ட பின்னர் உரிமம் பெற சென்னை மாநகராட்சி சார்பாக கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாமானது 7 இடங்களில் நடத்தப்பட்டது.வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற கடைசி நாள் ஆகும். அதற்கு பிறகு, செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் சிப் பொறுத்தாமல் உரிமம் பெறாமல் இருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்புஇன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதிகாலை 5 மணி முதல் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த செல்லப்பிராணி உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். செல்லப்பிராணி உரிமையாளர்கள், செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற இன்னும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்செல்லப்பிராணி சிகிச்சை மையத்திலும் குறைவான ஆட்கள் உள்ளதால் தாமதம் ஆகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்பெரும்பாலான செல்லப்பிராணிகளுக்கு முககவசம் இல்லாமல் அழைத்து வந்துள்ளதால் சாலையை கடக்க கூடிய மக்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.