ஈரோடு தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, கியூ.ஆர் கோடு, பாஸ் ஆகியன தேவையில்லை என, தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி திடலில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் தாங்களாகவே வந்து பங்கேற்கலாம் என கூறினார். மேலும், வேறு எங்கும் இதுவரை இந்த அளவிற்கு தலைவர் நிற்கும் இடத்திற்கு பாதுகாப்பு அரண் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.