வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் கிராமத்தில் மாடுவிடும் திருவிழா இன்று நடைபெற்றது. மேலும் முன்னதாக இக்கிராமத்தில் எருதுவிடும் சாலைகளில் மண் கொட்டி மண் சாலையாக வடிவமைக்கப்பட்டது. அரசு விதிகள் படி போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.ஒரு எருது 1 சுற்றுகள் விடப்பட்டு அதில் அதிவேகமாக ஓடும் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இதில் முதல் பரிசாக ராயல் என்ஃபீல்ட் 2வது பரிசாக பஜாஜ் பல்சர்150cc 3வது பரிசாக பஜாஜ் பல்சர்125cc வாகனம் என மொத்தம் 150க்கும் மேற்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எருது விடும் திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது, காளைகள் உரிமையாளர் இளைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் எருதுவிடும் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினர் தீயனைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். Related Link அம்மா திருமண மண்டபத்தை நீதிமன்றமாக மாற்ற எதிர்ப்பு