திருநெல்வேலியில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், 20 மாதங்களில் இரண்டாவது முறையாக சேதமடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தியகராஜர் நகர் - மகாராஜநகரை இணைக்கும் முக்கிய பாதையில் 26 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தின் மேற்பகுதி உடைந்து சேதமடைந்த நிலையில், சாலை சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லையில் பெய்த மழை காரணமாக மேம்பால பாதையின் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.