திருச்சி மலைகோட்டையில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் தாயை, நகைக்காக கொலை செய்து மர்மநபர்கள் சாக்கு மூட்டையில் கட்டி குப்பையில் தூக்கி வீசிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளாடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டராக வனத்தான் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் கல்யாணி திருவாசியில் வசித்து வரும் நிலையில், மலைக்கோட்டைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, தனது தாய் காணவில்லை என ஸ்டேஷன் மாஸ்டர் காவல்நிலைத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், மலைக்கோட்டையில் உள்ள பஜார்கடைகளின் குப்பை கொட்டும் இடத்தில் சாக்கு மூட்டையில் மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.