சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், அதனை சிறு தொகுப்பாக தற்போது காணலாம்....சென்னை வள்ளுவர் கோட்டம் பள்ளி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழைநீரில் இறங்காமல் இருப்பதற்காக சாலையோரம் நடந்து சென்ற பெண் ஒருவர் தடுமாறி சாலையில் விழுந்தார். மேலும் பள்ளி சாலையில் உள்ள சுதந்திர பூங்காவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் வியாபாரிகள் கடை அமைத்திருக்கும் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மேலும் மழையால் பொதுமக்கள் வருகையின்றி மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னை சுற்றுவட்டார பகுதியில் கனமழையானது வெளுத்து வாங்கி வருகிறது சென்னை கோயம்பேடு பகுதியில் இரவு மழையானது பெய்தது குறிப்பாக கோயம்பேடு சந்தை உள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் இங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது இதனால் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.கோயம்பேடு சந்தை சாலையில் முழுவதும் மழை நீர் முழுவதுமாக தேங்கியுள்ளது அதேபோல் சந்தையின் உட்பகுதிகளிலும் மழை நீர் தேங்கி வருவதால் வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் நசரத்பேட்டை ஊராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் நசரத்பேட்டை ஊராட்சியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.பாரதியார் நகர், அன்பரசு நகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது மழை துவக்கத்திலேயே மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பகுதி மக்கள் வேதனை அடுத்தடுத்து மழை அறிவிப்புகள் இருப்பதால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை. சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. காலை முதலே வடசென்னை பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது புது வண்ணாரப்பேட்டை இளைய தெருவில் தண்ணீர் முட்டி கால் அளவிற்கு தேங்கி இருக்கிறது. தேங்கி இருக்கும் மழை நீரில் கழிவு நீரும் கலந்து இருப்பதால் நோய் தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை இயக்க முடியாமல் தண்ணீரில் தத்தளித்த படி தடு மாறிய படி எங்கே தவறி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வாகனத்தை இயக்கிக் கொண்டு செல்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்த இடத்தில் மேலும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால் ஒரு மோட்டார் மூலம் இந்த தண்ணீரை வெளியேற்ற வருகின்றன. கூடுதலாக அதிக திறன் கொண்ட மோட்டாரை வைத்து தனி அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.