திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பெய்த கனமழையால் பிரதி மருதீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்.பிரகாரம் முழுவதும் நீர் தேங்கியதால் பக்தர்கள் தவிப்பு. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கனமழை பெய்து வரும் நிலையில், புகழ்பெற்ற பிரதி மருதீஸ்வரர் கோயிலில் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக, முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள மழை நீரில் நடந்து சென்று, பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உடனடியாக கோயிலில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.