செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பவுஞ்சூர் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து மதுராந்தகம் தேசியநெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் மழைநீர் சூழ்ந்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.