தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழையின் காரணமாக மாமரங்களில் பூத்துள்ள மாம்பூக்கள் உதிரும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.