தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளம் கொட்டுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் பேரருவி, ஐந்தருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில் 3ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் ஓடியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.