மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, குற்றாலம் பிரதான அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில், குற்றாலம் பிரதான அருவியிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.