தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச் சாலையில், நேற்றிரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இருள் சூழ்ந்த மலைச் சாலையில், கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து மழையும் பெய்தது. இதன் காரணமாக, மலைச்சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.