பொள்ளாச்சி தாலுக்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு சபை மற்றும் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு காங்கேயம் இன காளைகளை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் . விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது வடக்கு பாளையம் சாலையில் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளை ஜோடிகள் பங்கு பெற்றனர். இரண்டு பல் காளைகளுக்கு 200 மீட்டர் தூரமும் நான்கு காளைகளுக்கு 300 மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளை பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து கண்டு ரசித்தனர்.இதையும் படியுங்கள் : தமிழகத்தை உலுக்கிய பகீர் சம்பவம்.. கொந்தளித்து நயினார் போட்ட பதிவு