ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் ஓலைக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சோதனை ஓட்டம் துவங்கி உள்ளதாக தெரிவித்தார். இதனால் அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் பல்வேறு வகையான மரங்களை வளர்க்க பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நகராட்சி ஆணையர் வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.