கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சுமார் 5,000 பேருக்கு ரம்ஜான் பிரியாணி வழங்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை கோட்டைமேடு வின்சென்ட் சாலை கிரீன் கார்டன் குடியிருப்பு பொது நலச்சங்கம் சார்பில் 6-வது ஆண்டாக சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோருக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில், இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுவதாகவும் ரம்ஜான் பண்டிகையின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.