திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் இளம்பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு நடனமாடி வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்டுள்ள நிலையில், இதுபோன்ற செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஆன்மீக தலங்களில் இம்மாதிரியான அத்துமீறல்களை தடுக்க வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கோயிலில் நடனமாடி வீடியோ பதிவிட்ட சுபி என்பவர், பக்தர்கள் கண்டனம் தெரிவித்ததால் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.