அமானுஷ்ய வீடு எனக்கூறி ரீல்ஸ் : சென்னை அசோக் நகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு மூவர் படுகொலை செய்யப்பட்ட வீடு பாழடைந்து அப்படியே உள்ளது. இந்த பாழடைந்த வீட்டில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து வீடியோ காட்சிகளை எடுத்து அமானுஷ்யம் உள்ளதாக கூறி இன்ஸ்டாகிராமில் ரில்ஸாக பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் அசோக் நகரில் உள்ள அந்த பாழடைந்த பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை மீறி இளைஞர்கள் யாரேனும் பாழடைந்த கட்டிடத்திற்குள் அத்துமீறி உள்ளே சென்று வீடியோ எடுத்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Related Link "இந்தியா கூட்டணி நொண்டி கொண்டிருக்கிறது"