விழுப்புரம் மாவட்டம் வெங்கடேசபுரம் கிராமத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் இறந்துவிட்டதாக உறவினர் கொடுத்த தவறான தகவல் காரணமாக அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த 15ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் புதுவை அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்மருத்துவமனை நிர்வாகம் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அவரை அனுப்பி வைத்தபோது, பிரகாஷ் இறந்துவிட்டதாக உறவினர் ஒருவர் தகவலை பரப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர் திடீரென கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.