தறி உரிமையாளர் தற்கொலைக்கு காரணமான நிதி நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலை வளர்ப்பதற்காக கிராம சக்தி பைனான்ஸ் நிறுவனத்தில், ஐயந்துரை 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில், ஒரு மாத தவணை செலுத்த தாமதமானதால், ஊழியர்கள் வீட்டிற்கே சென்ற பணத்தை கேட்டு வற்புறுத்தியதாக தெரிகிறது.