கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தில் உள்ள ஓடையில், இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் சடலத்தை அவரது உறவினர்கள் சுடுக்காட்டிற்கு எடுத்து சென்றனர். கனமழையின் காரணமாக வரஞ்சம் ஏரி நிரப்பி ஓடையில் உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.